காவிரி விவகாரம் - 2 வார அவகாசம் கோரிய மனு: மத்திய அரசு வாபஸ் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 27, 2018, 23:50 [IST] காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 16ந் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்‘ (செயல்திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 6 வார காலக்கெடு முடிவடைந்த நிலையில், ‘ஸ்கீம்‘ என்பதற்கு விளக்கம் கோரியும், செயல் திட்டத்தை அமல்படுத்த 3 மாத காலஅவகாசமும் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு மனு செய்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே மாதம் 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் காவிரி விவகாரத்தில் மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மத்திய அரசின் செயலுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது. தமிழக எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவிரி வழக்கில் தீர்ப்பை அமல்படுத்த மேலும் 2 வார அவகாசம் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாபஸ் பெற்று உள்ளது. தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலின் ஆட்சேபணையை அடுத்து மத்திய அரசு மனுவை வாபஸ் பெற்று உள்ளது. வரைவு திட்டத்தை தயாரிக்க இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|