11 எம்.எல்.ஏ. வழக்கு: சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது:நீதிமன்றம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 27, 2018, 17:55 [IST] முதலமைச்சராக பதவியேற்ற பழனிசாமி அரசு மீது கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் அதிமுக-வை சேர்ந்த பன்னீர்செல்வம், ஆறுக்குட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், நடராஜ் ஆகிய 11 பேர் ஆளும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். கொறடா உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியது. தீர்ப்பில், “சபாநாயகர் அதிகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தகுதிநீக்கி உத்தரவிட முடியாது. சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். எனினும் திமுக தரப்பில் மேல் முறையீடு செய்யலாம் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|