ராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 27, 2018, 08:30 [IST] கர்நாடக மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் பிரசாரம் செய்ய டெல்லியில் இருந்து ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர் கவுசல் வித்யார்த்தி மற்றும் அவரது பாதுகாப்பாளர்களும் விமானம் மூலமாக ஹூப்ளிக்கு நேற்று (வியாழக்கிழமை) வந்தனர். அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனை சரி செய்ய முயன்றும் விமானியால் முடியவில்லை. ஆட்டோ பைலட் முறையும் ஒத்துழைக்காத நிலையில், விமானத்தை தரையிறக்க விமானி முயன்றார். ஆனால் இரண்டு முறை தரையிறக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரு புறமாக தரையில் சாய்ந்தவாறே சென்ற விமானம் இறுதியாக 400 முதல் 500 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கவுசல் வித்யார்த்தி, கர்நாடக டிஜிபி யிடம் புகார் அளித்துள்ளார். விமான போக்குவரத்து அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு எதிர்பாராமல் நடந்த ஒன்று எனினும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றனர். இதையடுத்து சிறப்பு பாதுகாப்பு உள்ள ராகுல் சென்ற தனி விமானத்தின் பராமரிப்பு குறித்தும், விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்த விசாரணைக்கு விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. ரெலிகார் ஏவியேசன் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் தான் ராகுல் காந்தி பயணம் செய்துள்ளார். இந்த விமானம் விடி ஏவிஎச் பால்கன் 2000 என்ற ரகத்தை சேர்ந்தது.
|
பாரதியின் பூனைகள் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: நவம்பர் 2019 பக்கங்கள்: 88 எடை: 100 கிராம் வகைப்பாடு : கட்டுரை ISBN: 978-81-9433-482-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 80.00 தள்ளுபடி விலை: ரூ. 75.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: பாரதியின் பூனைகள்’ ஒவ்வொரு கட்டுரையையும் மாறுபட்ட கோணத்தில், எளிமையான மொழி நடையில், அழகான சொற்களைக் கோர்த்து தந்திருப்பதோடு ஆங்காங்கே நமக்குள் மென்முறுவல் பூக்கும் வகையில் நகைச்சுவையும் தூவித் தந்திருக்கிறார் நூலாசிரியர் மருதன். தாகூர், சாவித்ரிபாய் புலே, ஆன் ஃப்ராங்க், கபீர், மொசார்ட், நியூட்டன், ஐன்ஸ்டைன், மாக்சிம் கார்கி, புத்தர், பாரதி, லூயி பிரெயில் என்று மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்ட அட்டகாசமான 25 கட்டுரைகள் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|