பல்சுவை இணைய இதழ்
  


ஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் கேட்பன் பதவியில் இருந்து கம்பீர் விலகல்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 25, 2018, 19:40 [IST]

டெல்லி: ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்வி காரணமாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீர் விலகியுள்ளார். புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டி தொடரில் சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளனர். இறுதியில் 4 இடங்கள் பிடிக்கும் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை தான் விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த அணிக்குத் தலைவராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வந்தார்.

தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் கவுதம் கம்பீர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி 27-ம் தேதி நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.

“டெல்லி அணிக்கு போதுமான பங்களிப்பை என்னால் அளிக்க முடியவில்லை. கேப்டன் பதவியில் இருந்து விலகுவது தனிப்பட்ட முடிவு. கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு இதுதான் சரியான் தருணம் என்று நான் கருதுகிறேன்” என்று பதவி விலகிய கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் கவுதம் காம்பீர் கொல்கத்தா அணியில் கேப்டனாக இருந்த போது அணியை சிறப்பாக வழிநடத்தி 2 முறை கோப்பையை பெற்று தந்துள்ளார்.

ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா, டேனியல் வெட்டோரி, ஷிகர் தவண் ஆகியோரும் இதே போன்று கேப்டன்சியை இதற்கு முன் துறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்










சிலையும் நீ சிற்பியும் நீ
ஆசிரியர்: நாகூர் ரூமி
வகைப்பாடு : சுயமுன்னேற்றம்
விலை: ரூ. 120.00
தள்ளுபடி விலை: ரூ. 110.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

என்னருகே நீயிருந்தால்
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)