திருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சின் தடம் புரண்டது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 25, 2018, 16:20 [IST] காரைக்குடி- சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ், திருச்சியில் காலை 6.10 மணியளவில், தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து அங்கு வந்த ஊழியர்கள், ஹைட்ராலிக் ஜாக் இயந்திரம் மூலம் ரயில் என்ஜீன் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தினர். சுமார் 3 மணி நேரம் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில் மற்றும் திண்டுக்கல், ராமேஸ்வரம் பயணிகள் ரெயிலும் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன. பின்னர் தடம்புரண்ட இஞ்சின் மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டதை அடுத்து, சுமார் 3 மணி நேர தாமதத்துக்குப் பின் பல்லவன் எக்ஸ்பிரஸ் சென்னைக்குப் புறப்பட்டது. சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்கு கிளம்ப வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 5 மணிக்கு தான் கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகுதான் ரயில் தடம்புரண்டதற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|