சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 23, 2018, 15:30 [IST] சென்னை அடையாறில் உள்ள இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தவும் எடுக்கவும் வரிசையில் காத்திருந்தனர். அச்சமயம் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து ரூ. 6 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு வெளியே ஓட முயன்றுள்ளார். வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்றபோது துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியிலிருந்து வெளியே ஓடி வந்துள்ளார். உடனே வங்கி அதிகாரிகள் சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் மர்ம நபர் பிடிபட்டார். அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட மர்ம நபரிடம் சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்த துப்பாக்கி குறித்தும், மர்ம நபர் யார் என்பன குறித்தும் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர் பிடிபட்ட மர்ம நபரிடம் சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வைத்திருந்த துப்பாக்கி உண்மையான துப்பாக்கியா, மர்ம நபர் யார் என்பன உள்ளிட்ட விவரங்களை போலீசார் கேட்டு வருகின்றனர். பணத்தை கொள்ளையடித்துச் சென்று பிடிபட்டவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே அவர் இதே பகுதியில் உள்ள யூனியன் வங்கி கிளையிலும் கொள்ளையடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|