மஹாராஷ்டிராவில் 14 நக்சலைட்கள் சுட்டுக்கொலை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 22, 2018, 18:15 [IST] மஹாராஷ்டிர மாநிலம், கட்ச்ரோலி மாவட்டம் போரியா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் வேட்டையின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 நக்சலைட்டுகள் சுட்டுகொல்லபட்டதாக டி.ஐ.ஜி அங்குஷ் ஷிண்டே தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் பீடி உள்ளிட்டவை தயாரிப்பில் மூலப் பொருளாக உள்ள Tendu எனப்படும் இலைகள் உருவாகும் காலமாகும். இது நக்சல்களின் வருமான வரத்தாகும் இருந்து வருகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|