ராமநாதபுரம்: சனி ஞாயிறு கடல் சீற்றம்-கடலுக்கு செல்ல வேண்டாம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 20, 2018, 17:35 [IST] ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மாவட்ட மீனவர்கள் நாளை (சனி), மற்றும் நாளை மறுநாள் (ஞாயிறு) கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடலோரத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருக்குமென்பதால் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முற்பகல் 11.50க்கு மணிக்கு வழக்கத்தைவிட கடல்சீற்றம் அதிகமாக இருக்கும். 2 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை கடல் அலைகள் உயரும் என இன்சாட் அமைப்பு தெரிவித்துள்ளது. 18 முதல் 22 விநாடிகள் இடைவெளியில் அலைகள் சீற்றத்துடன் காணப்படும். “பொதுமக்கள் யாரும் மேற்கண்ட நாட்களில் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் எனவும், இந்தியா கடல்சார் தகவல் மையத்திலிருந்து எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும்” சென்னை எழிலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|