நிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் அனுமதி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 20, 2018, 17:10 [IST] விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகளை அக்கல்லூரியின் துணை பேராசிரியை நிர்மலா தேவி, உயர் அதிகாரிகளுக்காக பாலியல் தேவைக்கு உட்படுமாறு மூளைச்சலவை செய்யும் ஆடியோ வெளியானது. இதையடுத்து கல்லூரி செயலர் ராமசாமி கடந்த 16-ம் தேதி பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுத்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் பேராசிரியர் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கை டிஜிபி ராஜேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதுமட்டுமின்றி இந்த விவகாரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஓய்வு பெற்ற நீதிபதி சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தனது விசாரணையை இன்று தொடங்கினார். சிபிசிஐடி போலீஸாரும் 9 குழுக்களாக பிரிந்து இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சாத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவியை இன்று (வெள்ளிக்கிழமை) போலீஸார் ஆஜர்படுத்தினர். நிர்மலா தேவியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சாத்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நுழைவாயிலில் நிர்மலாதேவிக்கு எதிராக மகளிர் அமைப்பினர் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சாத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|