பல்சுவை இணைய இதழ்
  


ஆளுநர் மாளிகைக்கு தேமுதிக பேரணி - விஜயகாந்த், பிரேமலதா கைது

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 20, 2018, 16:30 [IST]

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற விஜயகாந்த், பிரேமலதா மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகத்தை சேர்ந்த எம்.கே.சூரப்பாவை ஆளுநர் நியமித்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சூரப்பா நியமனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டுமென தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தினார். தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும் எனவும் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று (20-04-2018) விஜயகாந்த் தலைமையில் தேமுதிக சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. இதில், பிரேமலதா மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை, சைதாப்பேட்டையிலுள்ள பனகல் மாளிகையிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களை, காவல்துறையினர் தடுப்புகள் வைத்து தடுத்தனர். அதனால், காவல்துறையினருக்கும் தே.மு.தி.க-வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பா.ஜ.க எம்.பி, எல்.ஏல்.ஏ-க்கள் முதல் இடத்திலுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சூரப்பா நியமனம் தேவையா, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடிக்கிறது. பா.ஜ.க அரசு தொடர்ச்சியாகத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்துவருகிறது” என்று தெரிவித்தார்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்










பகத் சிங்
ஆசிரியர்: என். சொக்கன்
வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு
விலை: ரூ. 188.00
தள்ளுபடி விலை: ரூ. 170.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

பசியின் நிறம் வெள்ளை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

வானம் பொய்க்காது
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)