பேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆளுநர் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 17, 2018, 18:45 [IST] அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை, நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் ஆடியோ உரையாடல் வெளியானதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை 6 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: - மாணவிகளை பேராசிரியை தவறாக வழி நடத்தியது கண்டிக்கத்தக்கது. - பேராசிரியை விவகாரத்தில் சிறு தவறு நடந்துள்ளது. - நிர்மலா தேவி யாரென்றே எனக்கு தெரியாது. - என் மீது தவறாக குற்றம் சுமத்தப்படுகிறது - இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். - சி.பி.ஐ. விசாரணைக்கு அவசியமில்லை. - இது குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. - அந்த குழு அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயலவில்லை. - பெண் ஒருவர் தலைமையில் விசாரணை தேவையில்லை - காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான முடிவுகள் வரும் - விசாரணை அதிகாரி சந்தானத்திற்கு எந்த தடையும் இல்லை - பிரதமரை சந்திப்பது தொடர்பான திமுகவின் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன் - தகுதியின் அடிப்படையிலேயே சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|