நேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 17, 2018, 11:15 [IST] இந்திய நேபாள எல்லையிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பிராத் நகர். இங்கு இந்திய தூதரகத்தின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே நேற்று திங்கட்கிழமை (16-04-2018) இரவு சுமார் 8.20 மணியளவில் சிறிய அளவிலான குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 1 அடிக்கு 1.5 அடி அளவில் பள்ளம் ஏற்பட்டது. கட்டிடத்தின் பின்பக்க மதிற்சுவர் அருகில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது அலுவலகத்தில் எவரும் இல்லை. மேலும் இந்த குண்டுவெடிப்பில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. நேபாள காவல்துறையினர் இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிராட் நகர் காத்மண்டுக்கு அடுத்த பெரிய நகரமாகும். இது இந்தியாவின் பீகார் மாநில எல்லையில் அமைந்துள்ளது. நேபாளம் மற்றும் வடக்கு பீகாரில் 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது பிராட்நகரில் தற்காலிக தூதரக அலுவலகம் துவங்கப்பட்டது. அப்போது முதல் அது செயல்பட்டு வருகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|