தேனித் தமிழ்ச் சங்கம்: புத்தக வாசிப்பும் புதிய சிந்தனைகளும் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 16, 2018, 08:30 [IST] தேனித் தமிழ்ச் சங்கத்தின் சித்திரை மாதக் கூட்டம் வருகிற 21-4-2018 அன்று மாலை 6.00 மணிக்கு தேனி, மதுரை சாலையிலுள்ள மாயா புத்தக நிலைய மாடியில் தலைவர் தேனி மு. சுப்பிரமணி அவர்களது தலைமையில், செயலாளர் சு.சி. பொன்முடி, துணைச்செயலாளர்கள் மருத்துவர் பிரீத்தா நிலா, அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் காந்திகிராமம், காந்திகிராமக் கிராமியப் பல்கலையின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியரும், குடியரசுத்தலைவரின் இளம்தமிழறிஞர் விருது பெற்றவருமான முனைவர் சி. சிதம்பரம் ‘புத்தக வாசிப்பும் புதிய சிந்தனைகளும்’ என்ற தலைப்பிலும், தேனி, நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ம. தேவகி ‘வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் புத்தகங்கள்’ எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றவிருக்கின்றனர். இக்கூட்டத்திற்கு சங்கத்தின் துணைத்தலைவர் ந.வீ.வீ. இளங்கோ வரவேற்புரையும், சங்கத்தின் பொருளாளர் கவிஞர் ம. கவிக்கருப்பையா நன்றியுரையுமாற்றவிருக்கின்றனர். இக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென்று சங்கத்தின் தலைவர் தேனி மு.சுப்பிரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
|
ஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள் மொழிபெயர்ப்பாளர்: PSV குமாரசாமி மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஆகஸ்டு 2019 பக்கங்கள்: 268 எடை: 300 கிராம் வகைப்பாடு : வர்த்தகம் ISBN: 978-93-8914-326-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 299.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஏன் வெற்றி தேவதை சிலருடைய வாசற்கதவுகளை மட்டும் தட்டிக் கொண்டிருக்கிறாள்? ஏன் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன? ஏனெனில், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில்வாழ்க்கையிலும் சரி, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஏன் அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஸ்டீவ் ஜாப்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ரைட் சகோதரர்கள் ஆகியோருக்கு இடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அவர்கள் அனைவரும் ஏன் என்ற கேள்வியிலிருந்து துவக்கினர். பிறரை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கும் சரியான தலைவர்களை அடையாளம் காண ஆசைப்படுகின்றவர்களுக்கும் இந்நூல் உறுதுணையாக இருக்கும். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|