பல்சுவை இணைய இதழ்
  


காமன்வெல்த்: இன்று 10ம் நாளில் மட்டும் இந்தியாவுக்கு 8 தங்கம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 14, 2018, 21:25 [IST]

கோல்டுகோஸ்ட், ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில், இன்று (14-04-2018) ஒரே நாளில் மட்டும் இந்தியாவுக்கு 8 தங்கப்பதக்கங்கள் கிடைத்தன. இதன் மூலம் பதக்க பட்டியலில், இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி 18 வெண்கலம் என 59 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது.

தங்கப் பதக்கம்

1. சஞ்சீவ் ராஜ்புட்: ஆண்கள் 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் துப்பாக்கிச்சுடுதலில் - 454.5 புள்ளி பெற்று தங்கம் வென்றார்.

2. மணிகா பத்ரா: மகளிர் டேபிள் டென்னிஸில் தங்கம் வென்றார்.

3. சுமித் மாலிக்: ஆண்கள் 125 கி.கி. பிரிஸ்டைல் மல்யுத்த போட்டியில் தங்கம் வென்றார்.

4. வினேஷ் போகத்: மல்யுத்தம் பெண்கள் 'பிரிஸ்டைல்' 50 கி.கி. போட்டியில், தங்கம் வென்றார்.

5. மேரிகோம்: பெண்களுக்கான 'லைட் பிளை வெயிட்' 41- 45 கி.கி. பிரிவு குத்துச்சண்டையில் வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டினாவை வென்று தங்கம் வென்றார்.

6. கவுரவ் சோலங்கி: ஆண்கள் பிளைவெயிட் 52 கி.கி. குத்துச்சண்டையில் வடக்கு அயர்லாந்தின் இர்வினை வென்று தங்கம் வென்றார்.

7. நீரஜ் சோப்ரா: ஈட்டி எறிதலில் அதிகபட்சமாக 86.47 மீ. தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார்.

8. விகாஷ் கிருஷ்ணன்: ஆண்கள் மிடில் வெயிட் 75 கி.கி. பைனலில், காமரூனை சேர்ந்த வில்பிரட்டை வீழ்த்தி தங்கம் வென்றார்.

வெள்ளிப் பதக்கம்

1. அமித் பங்கல்: ஆண்கள் லைட் பிளை வெயிட் 49 கி.கி. குத்துச்சண்டை போட்டி பைனலில் 1-3 என இங்கிலாந்தின் கலாலிடம் வீழ்ந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2. மனிஷ் கவுஷிக்: ஆண்கள் லைட் வெயிட் 50 கி.கி. குத்துச்சண்டை போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஹாரியிடம் தோற்று வெள்ளி பதக்கம் வென்றார்.

3. சதிஷ்குமார்: ஆண்கள் 91 கி.கி. குத்துச்சண்டையில், இங்கிலாந்து வீரர் பிரேஸர் கிளார்கிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

4. தீபிகா பல்லிக்கல், சவுரவ் கோஷல் கலப்பு இரட்டையர் ஸ்குவாஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

5. சரத் கமல் / ஜி.சத்யன்: டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

வெண்கலப் பதக்கம்

1. அஸ்வினி பொன்னப்பா / என்.சிக்கி ரெட்டி: மகளிர் இரட்டையர் பிரிவு ஸ்குவாஸ் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது.

2. ஹர்மீத் தேசாய் / சனில் ஷெட்டி: ஆண்கள் இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்றனர்.

3. சாக்ஷி மாலிக்: பெண்கள் 'பிரிஸ்டைல்' 62 கி.கி. மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றார்.

4. சோம்வீர் : ஆண்கள் 86 கிலோ பிரிஸ்டைல் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றார்.

பிற செய்திகள்










இலக்கணத் தெளிவு
ஆசிரியர்: மகுடேசுவரன்
வகைப்பாடு : இலக்கணம்
விலை: ரூ. 120.00
தள்ளுபடி விலை: ரூ. 110.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

பசியின் நிறம் வெள்ளை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)