பல்சுவை இணைய இதழ்
  


தமிழக அரசு ஊழியர் அகவிலைப்படி 5% ல் இருந்து 7% ஆக உயர்வு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 13, 2018, 09:50 [IST]

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பாக வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது :

அலுவலர் குழு பரிந்துரை பேரில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கான சம்பளம், அகவிலைப்படியை திருத்தி கடந்த 11.10.17 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தற்போது வழங்கப்படும் 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக 1.1.18 தேதியில் இருந்து உயர்த்தி 15.3.18 அன்று மத்திய நிதித்துறை உத்தரவிட்டது.

தமிழக அரசும் தனது பணியாளர்களுக்கு 1.1.18 அன்றில் இருந்து மாதம் ஒன்றுக்கு 7 சதவீதமாக உயர்த்தி உத்தரவிடுகிறது.

ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை, மின்னணு பரிமாற்ற முறையில் அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். பகுதி நேர ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள், யு.ஜி.சி.யால் நிர்வகிக்கப்படும் ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர், உடல் கல்வி இயக்குனர்கள், நூலகர்கள், வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள், மதிய உணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்










கற்சுவர்கள்
ஆசிரியர்: தீபம் நா. பார்த்தசாரதி
வகைப்பாடு : புதினம் (நாவல்)
விலை: ரூ. 115.00
தள்ளுபடி விலை: ரூ. 100.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



இக பர இந்து மத சிந்தனை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)