பல்சுவை இணைய இதழ்
  


அல்ஜீரிய ராணுவ விமான விபத்தில் 257க்கும் மேற்பட்டோர் பலி

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 11, 2018, 21:25 [IST]

அல்ஜீயர்ஸ்: அல்ஜீயர்ஸ்: அல்ஜீரியாவில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் 257 ராணுவ வீரர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அல்ஜீரியா தலைநகர் அல்ஜீயர்ஸில் இருந்து ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு Il-76 என்ற விமானம் பௌஃபாரிக் விமான நிலையத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் தென்மேற்கு பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்கு சென்று கொண்டிருந்தது.

அந்த விமானம் தெற்கு அல்ஜீரியாவில் உள்ள டின்டஃப் பகுதியில் தரையிறங்க இருந்தது. அப்போது சில நிமிடங்களில் ஆளில்லாத நிலப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 257 வீரர்கள் இறந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் மேற்கு சஹாரா பகுதியில் சுதந்திரம் வேண்டிய போராடும் குழுவைச் சேர்ந்தவர்கள் 26 பேரும் இருந்ததாக கூறப்படுகிறது.

அல்ஜீரியாவின் எல்லை ஓரப் பகுதியான டின்டாப் பகுதியில்தான் பொலிசாரியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள், மொராக்கோ நாட்டை ஒட்டிய பகுதியில் சுயாட்சி கேட்டு போராடி வருகிறார்கள். இவர்களுக்கு அல்ஜீரிய அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது.

விபத்துக்குள்ளான இது இலிஷின் Il-76 ரக விமானம் ஆகும். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் அங்குள்ளவர்களின் நிலை குறித்து இன்னும் எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

பிற செய்திகள்










பேசித் தீர்த்த பொழுதுகள்
ஆசிரியர்:
வகைப்பாடு : சொற்பொழிவு
விலை: ரூ. 90.00
தள்ளுபடி விலை: ரூ. 80.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சிட்டுக்குருவி
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)