திண்டிவனம்: ரயில் மீது ஏறி போராடிய பாமக தொண்டர் படுகாயம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 11, 2018, 13:00 [IST] காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய பாஜக அரசை வலியுறுத்தி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த முழு அடைப்பு காரணமாக பல மாவட்டங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. பாமக சார்பில் திண்டிவனத்திலும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பாமகவினர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அப்போது, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சின் மீது ஏறிய பாமக நகர இளைஞரணி துணை செயலாளர் ரஞ்சித் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் போராட்டக்களத்தில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னை எழும்பூரில் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு, தர்மபுரி, ஆம்பூர், அரியலூர், மதுரை, திருச்சி ரயில் நிலையங்களில் மறியலில் ஈடுபட்ட பாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|