நியூயார்க் டிரம்ப் டவரின் 50-வது மாடியில் தீவிபத்து: ஒருவர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 08, 2018, 11:10 [IST] நேற்று மாலை சுமார் உள்ளூர் நேரப்படி 5.30 மணியளவில் 60 மாடிகளைக் கொண்ட டிரம்ப் டவரின் 50-வது மாடியில் திடீரென தீ பற்றி மளமளவென பரவியது. தகவலறிந்து அங்கு ஐந்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த சுமார் 140க்கு மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்பரப்பில் உள்ள 3 அடுக்குகளை தனது வீடாக மாற்றி வசித்து வருகிறார். அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் டிரம்ப் வாஷிங்டன் நகரில் வசித்து வருகிறார். எனினும் நியூயார்க் வரும் போது இங்குள்ள வீட்டில் தங்குவார். விரைந்து தீயை அணைத்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அதிபர் டிரம்ப் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
|
என்ன சொல்கிறாய் சுடரே மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: நவம்பர் 2018 பக்கங்கள்: 216 எடை: 250 கிராம் வகைப்பாடு : சிறுகதை ISBN: 978-93-87484-62-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: மனித இருப்பின், மனித உறவுகளின் அபத்தங்களும் விசித்திரங்களும் எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளின் ஊடே அதுவரை சொல்லப்படாத வாழ்வின் புதிர்களை சொல்லிச் செல்கின்றன. அதற்கு இந்தத் தொகுப்பும் சிறந்த உதாரணம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|