ஜெர்மனியில் மக்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 4 பேர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 08, 2018, 07:35 [IST] ஜெர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள முன்ஸ்டெர் நகரில் உள்ள புகழ்பெற்ற கீபென்கெர் மதுபான விடுதிக்கு வெளியே ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்கள் வீதியில் நாற்காலியில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டுருந்தனர். அப்போது வேகமாக காரை ஓட்டி வந்த ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது மூர்க்கத்தனமாக மோதச் செய்தார். இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். 20க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர். சுமார் 50 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டிவந்தவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஜெர்மனி போலீசார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் உள்ளூர் நேரப்படி மதியம் 3:27கு நடைபெற்றது. காரை ஓட்டிவந்தவர் குறித்து எந்த ஒரு தகவலும் சரியாகத் தெரியவில்லை. எனினும் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்றும் சந்தேகித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்ற தாக்குதல் 2016ஆம் ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற்றதில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|