கனடா பேருந்து விபத்து: ஐஸ் ஹாக்கி வீரர்கள் 14 பேர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 08, 2018, 07:10 [IST] சஸ்கத்சூவன் ஜூனியர் ஹாக்கி லீக் போட்டியில் விளையாட சென்ற ஹம்போல்ட் பிரான்கஸ் அணியினர் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் மொத்தம் 28 பேர் இருந்துள்ளனர். கனடாவின் டிஸ்டேல் நகரிலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில், உள்ளூர் நேரம்ப்படி சுமார் மாலை 5.00 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றுள்ளது. அந்த அணியில் மொத்தம் 24 வீரர்கள் இருந்துள்ளனர். அனைவரும் கனடா தேசத்தவர் ஆவர். அவர்கள் அனைவரும் 16 முதல் 21 வயதுக்குட்பட்டவர் ஆவர். ஐஸ் ஹாக்கி கனடாவின் தேசிய விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் நடந்த பேருந்து விபத்தில் சிக்கி ஐஸ் ஹாக்கி வீரர்கள் 14 பேர் பலியானதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் 1986ஆம் ஆண்டு டிசம்பரில், இதே சஸ்கத்சூவன் நகரில் வெஸ்டர் ஹாக்கி லீக் சுவிஃப்ட் கரண்ட் பிரான்கஸ் அணியைச் சேர்ந்த 4 வீரர்கள் விபத்தில் பலியானார்கள்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|