பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 08, 2018, 00:25 [IST] 11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று மும்பையில் வான்கேட் மைதானத்தில் துவங்கியது. துவக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இரண்டு ஆண்டு கால தடைக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்கம் சிறப்பாக இல்லை. 7 ரன் இருக்கும் போது அதன் துவக்க ஆட்டக்காரர் எவின் லிவிஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து அணியின் ஸ்கோர் 20 இருக்கும் போது ரோஹித் சர்மா 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷன் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சிறப்பாக ஆடினர். சூர்ய குமார் யாதவ் 43 ரன்கள் எடுத்து வாட்சன் பந்தில் ஹர்பஜன் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இஷன் கிஷன் 40 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிர் பந்தில் மார்க் வுட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் அப்போது அணியின் ஸ்கோர் 113 ஆக இருந்தது. பின்னர் ஆட வந்த சகோதரர்களான ஹார்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா இருவரும் முறையே 22 மற்றும் 41 ரன்கள் எடுத்து ஆட்ட இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் இறுதியில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் தீபக் சஹர் 1 விக்கெட்டும், ஷேன் வாட்சன் 2 விக்கெட்டும், இம்ரான் தாஹிர் 1 விக்கெட்டும் எடுத்தனர். 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர். இருப்பினும் ஷேன் வாட்சன் 16 ரன்களும் அம்பதி ராயுடு 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஆட வந்த சுரேஷ் ரெய்னா ஹார்திக் பாண்டியாவின் பந்தில் க்ருணால் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் கேதார் ஜாதவ் 14 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். கடைசி விக்கெட்டுக்கு காயம் காரணமாக வெளியேறிய கேதார் ஜாதவ் திரும்பி வந்து ஆடினார். முதல் மூன்று பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்க இயலாத நிலையில், 4வது பந்தில் விக்கெட்டுக்கு பின் பக்கம் தூக்கி அடுத்து 6 ரன்கள் பெற்று அணியின் ஸ்கோரை சமநிலைக்கு கொண்டு வந்தார். பின்னர் அடுத்த பந்தில் 4 ரன்கள் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். ஒரு பந்து மீதம் இருக்கையில் கடைசி விக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் போக்கையே மாற்றிய டிவைன் பிராவோ ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிராவோ ஆடிய போது பூம்ராவின் ஓவரின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. பூம்ரா வீசிய ஒரு பந்து பிராவோ மட்டையில் பட்டு ஸ்டைம்பை நோக்கி மெதுவாக சென்று மோதி நின்று விட்டது. ஆனால் பைல்ஸ் விழாததால் பிராவோ தப்பிப் பிழைத்தார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|