காமன்வெல்த்: தங்கம் வென்றார் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 07, 2018, 14:10 [IST] 21வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பளு தூக்குதல் போட்டியின் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்றார். இவர் மொத்தம் 317 கிலோ எடையைத் தூக்கினார். சதீஷ்குமார் சிவலிங்கம் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர். இவர் கடந்த 2014 ம்ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் சதீஷ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. சதீஷ்குமாருக்கு 2015 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்ததோடு ரூ. 50 லட்சத்திற்கான உதவித்தொகையும் அறிவித்துள்ளார். முன்னதாக,பளுதூக்குதலில், 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சிகோம் மிராபாய் சானு, 53 கிலோ எடை பிரிவில் சஞ்சிதா சானு தங்கம் வென்றனர். பதக்க பட்டியில் 3 தங்கம் ஒரு வெள்ளி ,ஒரு வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|