எம்.கே.சூரப்பா அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமனம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 05, 2018, 21:15 [IST] அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த, ராஜாராமின் பதவிக்காலம், 2016 மே மாதம் முடிந்தது. இரண்டு ஆண்டுகளாக, துணைவேந்தரை நியமிக்க முடியாமல், தமிழக அரசு திணறி வருகிறது. இதற்காக 3 தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கடைசி 3ஆவது தேடல் குழு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, சிர்புர்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு 3 பேரை பரிந்துரைக்க ஏப்ரல் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக இன்று மாலை தகவல் வெளியானது. ஆனால் தேர்வுக் குழு கால அவகாசம் நீட்டிப்பு அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே துணை வேந்தரை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். எம்.கே.சூரப்பா துணை வேந்தராக மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார். கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பா இந்திய அறிவியல் மையத்தில் 24 ஆண்டுகள் பேராசிரியராகவும், 6 ஆண்டுகள் ஐ.ஐ.டி இயக்குநராக பணியாற்றியுள்ளார். சுமார் 150 ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.
|
ஆயிரம் வண்ணங்கள் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜூன் 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : ஓவியக் கலை ISBN: 978-93-87484-34-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 140.00 தள்ளுபடி விலை: ரூ. 130.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஓவியங்கள்,சிற்பங்கள்,கலைநூல்கள் குறித்த எஸ்.ராமகிருஷ்ணன் ர்ழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ஆயிரம் வண்ணங்கள்.நவீன ஓவியங்கள் குறித்த புரிதலை உருவாக்க இந்த கட்டுரைகள் பெரிதும் துணை செய்யக் கூடியவை.அத்துடன் உலகப்புகழ் பெற்ற மகத்தான ஓவியங்களைப் புரிந்துக்கொள்ளவும்,ரசிக்கவும்,கலையின் ஆதாரங்களை அடையாளம் காட்டவும் இவை முயற்சிக்கின்றன. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|