வடபழனி: கணவனை கட்டி போட்டு நகைக்காக மனைவி படுகொலை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 05, 2018, 16:35 [IST] சென்னை வடபழனியில் தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பிரபு என்பவர், தனது மனைவி ஞானப்பிரியாவுடன் வசித்து வந்தார். இவர் வடபழனி சிவன் கோவிலில் குருக்களாக இருப்பவர். நள்ளிரவில் முதல் தளத்தில் உள்ள இவர்களது வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று, இருவரது கை, கால்களை கயிறு மற்றும் துணியால் கட்டிப் போட்டுள்ளது. பிரபுவை தாக்கி குளியலறையில் போட்டுவிட்ட்டு, ஞானப்பிரியாவை கொலை செய்த அந்த கும்பல் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளையும், பீரோவில் இருந்த நகைகளையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. இன்று காலை வீடு திறந்து கிடப்பதைக் கண்ட வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி, உள்ளே சென்று பார்த்த போது, ஞானப்பிரியா வீட்டின் கழிவறையில் தலையில் படுகாயங்களுடனும், மற்றொரு அறையில் பிரபு கைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதைக் கண்டார். உடனே விஜயலட்சுமி காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து வடபழனி காவல்துறையினர் அங்கு வந்து ஆய்வு செய்ததில், ஞானப்பிரியா உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து படுகாயத்துடன் இருந்த பிரபுவை காவல்துறையினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கொலைக்கான காரணத்தை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரபு சுயநினைவுக்கு வந்தால் தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|