பல்சுவை இணைய இதழ்
  


மான் வேட்டை வழக்கு: சல்மான் குற்றவாளி என தீர்ப்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 05, 2018, 14:31 [IST]

ஜோத்பூர்: நடிகர் சல்மான் கான் மீதான, இருபது ஆண்டுகளுக்கு முந்தைய மான் வேட்டை வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றம் இன்று அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது. அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் ஆகியோர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

1998-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி ‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற ஹிந்தி படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சென்றிருந்தனர்.

அன்று இரவு, ஜோத்பூரை ஒட்டிய கங்கனி கிராமத்தில் ‘வெளி மான்’ (பிளாக் பக்) என்ற அரிய வகை மான்கள் இரண்டினை சல்மான் கான் வேட்டையாடியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சல்மான் கான், சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் ஆகியோர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக தனியாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் இருந்து சல்மான் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்










கொங்கு தேன்
ஆசிரியர்: சிவகுமார்
வகைப்பாடு : தன்வரலாறு
விலை: ரூ. 225.00
தள்ளுபடி விலை: ரூ. 200.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

சரணாகதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

இனியவள் இருபது
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)