பல்சுவை இணைய இதழ்
  


தமிழக அரசு சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 03, 2018, 23:40 [IST]

சென்னை: 2017-ம் ஆண்டுக்கான சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகளைத் தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு, தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டுவரும் தமிழ் அமைப்புகளுக்கும், கணினி யுகத்திற்கேற்ப, தமிழ் மொழியைக் கணினியில் அனைத்துத் தளங்களிலும் பயன்படுத்தும் வகையில், தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், தமிழ் வளர்ச்சித் துறையால் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், 2017-ஆம் ஆண்டுக்கான சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த்தாய் விருது - 2017 : பெங்களூரு தமிழ்ச் சங்கம், பெங்களூரு
கபிலர் விருது-2017 : முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்
உ.வே.சா விருது-2017: ச. கிருட்டினமூர்த்தி
கம்பர் விருது-2017: சுகி. சிவம்
சொல்லின் செல்வர் விருது-2017 : முனைவர் வைகைச் செல்வன்
ஜி.யு.போப் விருது-2017: கோ. இராஜேஸ்வரி கோதண்டம்
உமறுப்புலவர் விருது-2017 : ஹாஜி எம்.முகம்மது யூசுப்
இளங்கோவடிகள் விருது-2017: முனைவர் வெ. நல்லதம்பி
அம்மா இலக்கிய விருது-2017: முனைவர் எம்.எஸ். ஸ்ரீஇலட்சுமி, சிங்கப்பூர்
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது-2016: அல்டிமேட் மென்பொருள் தீர்வகம்

மொழிபெயர்ப்பாளர் விருது-2017 (10 விருதுகள்)

நெல்லை சு. முத்து, வசந்தா சியாமளம், தி.வ. தெய்வசிகாமணி (தெசிணி), முனைவர் இரா.கு. ஆல்துரை, ஆ. செல்வராசு (எ) குறிஞ்சிவேலன், பேராசிரியர் சி.அ. சங்கரநாராயணன், முனைவர் ஆனைவாரி ஆனந்தன், ஆண்டாள் பிரியதர்சினி, மறவன் புலவு சச்சிதானந்தம், முனைவர் தர்லோசன் சிங் பேடி

உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் 2016

இலக்கிய விருது - 2016 : நா.ஆண்டியப்பன், சிங்கப்பூர்
இலக்கண விருது - 2016 : பெஞ்சமின் லெபோ, பிரான்சு
மொழியியல் விருது - 2016 : முனைவர் சுபாஷினி, செருமானியம்
உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் 2017

இலக்கிய விருது - 2017: முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், ஆசுதிரேலியா
இலக்கண விருது - 2017: முனைவர் உல்ரிகே நிகோலஸ், செருமானியம்
மொழியியல் விருது - 2017 : மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, ஆசுதிரேலியா

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 5.4.2018 அன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் இவ்விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கவுள்ளார்.

தமிழ்த்தாய் விருது பெறும் அமைப்பினருக்கு விருதுத்தொகை ரூபாய் 5 இலட்சம் மற்றும் கேடயமும், கபிலர் விருது, உ.வே.சா விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு.போப் விருது, உமறுப் புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது மற்றும் முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது ஆகிய விருதுகளைப் பெறும் விருதாளர் ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சம் ரூபாய் விருதுத் தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் மற்றும் உலகத் தமிழ்ச் சங்க விருது, மொழிபெயர்ப்பாளர் விருது பெறும் விருதாளர் ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சம் ரூபாய் விருதுத் தொகை வழங்கியும் விருதாளர்கள் அனைவருக்கும் தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படுவார்கள்.

பிற செய்திகள்
மதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு
தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்
செப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை
தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்
சாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு
மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு
மோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை
திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்
வழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு




நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

இருள் பூமி
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

உங்களால் முடியும்!
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

ஆலவாயன் அர்த்தநாரி
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

The Greatest Secret In The World
Stock Available
ரூ.225.00
Buy

உணவு சரித்திரம்
இருப்பு உள்ளது
ரூ.240.00
Buy

108 திவ்ய தேச உலா - பாகம் 1
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்
இருப்பு உள்ளது
ரூ.300.00
Buy

27 நட்சத்திரக் கோயில்கள்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

சிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

ரெயினீஸ் ஐயர் தெரு
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

அபிதா
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

அறம்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

ஆரோக்கியமே அடித்தளம்!
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

காவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

ரயிலேறிய கிராமம்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

தாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

சாம்பலிலிருந்து பசுமைக்கு
இருப்பு உள்ளது
ரூ.215.00
Buy

வெக்கை
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

காந்தியோடு பேசுவேன்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy





எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)