பல்சுவை இணைய இதழ்
  


மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா காலமானார்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 02, 2018, 20:45 [IST]

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க இனவெறிக்கெதிரான போராட்ட தியாகியும், முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிபருமான நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா தனது 81வது வயதில் காலமானார்.

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நெல்சன் மண்டேலா. இவரது மனைவி வின்னி மண்டேலா (வயது 81). நெல்சன் மண்டேலாவின் இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் அவருடன் இணைந்து செயல்பட்டவர்.

நெல்சன் மண்டேலா 27 வருடம் ஜெயிலில் இருந்த போது வெளியில் போராட்டத்தை முன்னின்று நடத்தியது வின்னி மண்டேலா தான்.

பின்னர் நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்க அதிபராக ஆன போது, அவரது ஆட்சியில் பல பல முக்கிய பதவிகளை வின்னி மண்டேலா வகித்துள்ளார்.

கடந்த வாரம் வெள்ளி கிழமை வின்னிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக ஜோகன்னெஸ்பர்க் நகரில் உள்ள மில்பார்க் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் வின்னி மண்டேலா இன்று காலமானார்.

மண்டேலாவுக்கு 3 மனைவிகள். மண்டேலா 1944-ம் ஆண்டு, ஈவிலின் மேசேயை மணந்தார். இவர்களுக்கு 4 குழந்தைகள். அதில் மூவர் மரணமடைந்துவிட்டனர். 1958-ம் ஆண்டு இருவரும் விவாக ரத்து செய்து கொண்டனர்.

1958-ம் ஆண்டு தன்னை விட 16 வயது இளையவரான வின்னியை மணந்தார் மண்டேலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. 40 ஆண்டுகாலம் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியினர் 1998-ம் ஆண்டு பிரிந்தனர்.

பின்னர் மண்டேலா தனது 80-வது பிறந்த நாளில் மொசாம்பிகா முன்னாள் அதிபரின் விதவை மனைவி கிரேகா மச்சேசலை 3-வது திருணம் செய்தார்.

பிற செய்திகள்










வெற்றி நிச்சயம்
ஆசிரியர்: டாக்டர். ம. லெனின்
வகைப்பாடு : சுயமுன்னேற்றம்
விலை: ரூ. 166.00
தள்ளுபடி விலை: ரூ. 150.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



கதம்ப மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இடர் களையாய்...
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

வானம் பொய்க்காது
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)