சீன விண்வெளி ஆய்வுக்கூட பாகங்கள் பசுபிக் கடலில் விழுந்தது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 02, 2018, 09:15 [IST] சீனா 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 29-ந்தேதி ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையத்தை லாங் மார்ச் 2 எப்/ஜி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவி, நிறுவியது. டியான்காங்-1 விண்கலம் 10 மீட்டர் நீளம் மற்றும் 8 டன்கள் எடை கொண்டதாகும். இந்த விண்வெளி நிலையம் செயலற்றுப்போய் விட்டது என சீனா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி அறிவித்தது. இந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள், இன்று (திங்கட்கிழமை - 02-04-2018) பூமியில் வந்து விழும் என்று ஏற்கெனவே விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். விஞ்ஞானிகளின் கணிப்பிற்கு ஏற்ப இன்று திங்கட்கிழமை (02-04-2018) விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் பசுபிக் கடலில் விழுந்துள்ளன. பசுபிக் கடலில் விண்வெளி ஆய்வுக்கூடம் விழுந்ததால் பெரிய பாதிப்பு இல்லை.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|