குவைத் பேருந்து விபத்து 7 இந்தியர் உட்பட 15 பேர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 02, 2018, 00:25 [IST] குவைத்தில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் பணி முடிந்து இருப்பிடத்துக்கு இரண்டு பேருந்துகளில் திரும்பிக் கொண்டு இருந்தபோது, பர்கான் எண்ணெய் வயல் என்ற இடத்தில் எதிரே வந்த பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 15 பேர் பலியானார்கள். பலியானவர்களில் 7 பேர் இந்தியர்கள் எனவும், 5 எகிப்தியர்கள் என்றும் 3 பேர் பாகிஸ்தானியர்கள் என்று கூறப் படுகிறது. காயமடைந்த இருவரில் ஒருவர் இந்தியர் என்றும் மற்றொருவர் குவைத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
|
நெப்போலியன் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 416 எடை: 470 கிராம் வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு ISBN: 978-93-83067-25-1 இருப்பு உள்ளது விலை: ரூ. 366.00 தள்ளுபடி விலை: ரூ. 330.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: சாதாரணன் - சிப்பாய் - தளபதி - மன்னன் - சக்கரவர்த்தி - கைதி. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையை இப்படி ஆறே வார்த்தைகளில் சுருங்கச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த ஆறு வார்த்தைகளுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பேருண்மைகள் அதி ஆழமானவை, மிக அழுத்தமானவை. பால்ய காலத்தில் வறுமையைச் சுவைத்து, வெளியில் சொல்ல முடியாத அவலங்களை விழுங்கி, வளர்ந்த எந்த ஒரு மனிதனும் விதியின் புதைகுழியில் சிக்கி முகவரியே இல்லாமல் போயிருப்பான். ஆனால், தன்னம்பிக்கையின் முகவரியாகத் துளிர்த்து, தழைத்து, விழுதுவிட்டு வளர்ந்து நின்றவன் நெப்போலியன். எதிர்வந்த சிரமங்கள் எப்பேர்ப்பட்டதெனினும் அவற்றை ரோமங்களாகக் கருதி ஊதித் தள்ளும் மனோதிடம் இந்த மாவீரனின் தனிச்சிறப்பு. அந்த மனோதிடமும் தன்னம்பிக்கையும் நெப்போலியனுக்குள் நிலைபெற்றது எப்படி என்பதை நுணுக்கமாகப் படம் பிடித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. மாணவனாக இருந்தபோதே மனத்தளவில் போரிட்டுப் பழகியவன், வெறும் சிப்பாயாகத் தடம் பதித்தபோதே தலைமைத் தளபதிக்கு இணையாக இயங்கியவன், தளபதியாக உயர்ந்தபோதே சக்கரவர்த்தி சிம்மாசனத்தை நோக்கி வீரத்துடன் நகர்ந்தவன் - நெப்போலியன் எப்போதும் வருங்காலத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்து பார்த்தவன். இவன், மெய்யான மாவீரன் மட்டுமல்ல, கூர்த்த மதிகொண்ட அரசியல்வாதி; நேர்த்தியான நிர்வாகி; கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிச் செல்வதில் நிகரற்றவன்! நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|