உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மீது தாக்குதல்: வேல்முருகன் கைது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 01, 2018, 14:35 [IST] உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடகாவுக்கு ஆதரவாக காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தலைவர் வேல்முருகன் தலைமையில் உளுந்தூர்ப்பேட்டை சுங்கச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் சுங்கச்சாவடி மையத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று (31-03-2018) அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இருப்பினும் மத்திய அரசுக்கு எதிரான தமிழகமெங்கும் கொந்தளிப்பான சூழ்நிலையே நிலவுகிறது. கட்சிகள் அல்லாது பொதுமக்களும் தாமாகவே முன் வந்து நேற்று (31-03-2018) அன்று மெரினா கடற்கரையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|