திமுக ஆதரவு கட்சிகள் மறியல்: ஸ்டாலின், தலைவர்கள் கைது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 01, 2018, 13:40 [IST] உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்தபடி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடகாவுக்கு ஆதரவாக காலம் தாழ்த்திய மத்திய அரசை எதிர்த்து இன்று திமுக மற்றும் ஆதரவு கட்சிகள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் திமுகவின் ஆதரவு கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் ஆகிய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். இன்று (01-03-2018) காலையில் திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு உடனேயே போராட்டாம் துவங்கி விட்டது. மேலும் வரும் 5ம் தேதி வியாழக்கிழமை (05-03-2018) அன்று முழு அடைப்புக்கு திமுக மற்றும் ஆதரவு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. மறியல் போராட்டத்தை அடுத்து, ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுகவை சேர்ந்த துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, உதயநிதி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும், தொண்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மட்டுமல்லாது புதுச்சேரி, கோவை, ஆகிய இடங்களிலும் திடீர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|