இந்தூர்: 3 மாடி கட்டிடம் இடிந்து 10 பேர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 01, 2018, 08:20 [IST] மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள சார்வேட் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு மூன்று மாடி கட்டிடம் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தில் ஒரு ஹோட்டலும், லாட்ஜும் அமைந்துள்ளது. நேற்று (31-03-2018) இரவு 9.20 மணியளிவில் கார் ஒன்று கட்டிடத்தின் மீது மோதியுள்ளது. மிகவும் பழைய கட்டடம் என்பதால் அந்த அதிர்ச்சி தாங்காமல் 10 மணியளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இடிந்த கட்டிடம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானதாகும். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த கட்டிடத்தின் மேல் 3 தளங்களில் லாட்ஜில் தங்கியிருந்தவர்களும், தொழிலாளர்களும் ஆவார்கள். இடிபாடுகளில் சுமார் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுவதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|