ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு இலவச சேவை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 30, 2018, 21:05 [IST] 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜியோவின் கட்டண சேவை ஆரம்பித்தது. அதில் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் வாடிக்கையாளராக ரூ. 99 கட்டி இணைந்தனர். பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால், எஸ்டிடி, எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் ரோமிங் வசதி, நாடுமுழுவதும் இலவச ரோமிங், நாள்ஒன்றுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா, எஸ்எம்எஸ் ஆகியவை அளிக்கப்பட்டன. பிரைம் உறுப்பினர் சேவை வரும் மார்ச் 31-ம் தேதியோடு முடிய உள்ளது. இதையடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று (30-03-2018) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ஜியோ பிரைமில் ரூ.99 செலுத்தி ஏற்கெனவே வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு சேவை நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே ரூ.99 செலுத்திய உறுப்பினர்கள் மார்ச்31-ம்தேதிக்கு பின் மீண்டும் ரூ.99 செலுத்தத் தேவையில்லை. இந்த சலுகை வரும் 31-ம்தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் ஜியோ பிரைமில் இணையும் வாடிக்கையாளர்கள் மட்டும் ரூ.99 உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|