பல்சுவை இணைய இதழ்
  


மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 30, 2018, 15:35 [IST]

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஏப்ரல் 15ம் தேதி தமிழகம் வரும் பிரதமருக்கு திமுக கருப்புக் கொடி காட்ட உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்னையில் மத்திய அரசு கர்நாடகத்திற்கு ஆதரவாகவும், தமிழகத்தின் முதுகில் குத்தும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் திமுக சார்பில் அவசர தலைமை செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் 7 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், “15-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக செய்தி வந்துள்ளது. அவர் அப்படி 15-ம் தேதி தமிழகம் வரும்போது அவருக்கு திமுக சார்பில் கருப்புக் கொடி காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

அதிமுக அறிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “இது ஒரு நாடகம், சாகிற நேரத்தில் சங்கரா, சங்கரா என்பது போல் உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும் போது, “ஏப்.2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தவும், கடையடைப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு எதிராக திமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது குறைந்த பட்சம் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களாவது ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் திமுகவின் செயற்குழு கூட்ட முடிவுகள் பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

மாநிலத்தை ஆளும் அதிமுகவும், பலமான எதிர்க்கட்சியாக விளங்கும் திமுகாவும் தத்தம் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருப்பதாக மக்கள் விரக்தியில் உள்ளனர்.

பிற செய்திகள்










அசுரன்: வீழ்த்தப் பட்டவர்களின் வீர காவியம்
ஆசிரியர்: ஆனந்த் நீலகண்டன்
மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
விலை: ரூ. 499.00
தள்ளுபடி விலை: ரூ. 450.00
அஞ்சல்: ரூ. 60.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.66.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.66.00
Buy

தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)