பல்சுவை இணைய இதழ்
  


ஏப்ரல் 11ல் கருணாநிதியைச் சந்திக்கிறார் மமதா பானர்ஜி

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 29, 2018, 22:30 [IST]

சென்னை: மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி ஏப்ரல் 11 அல்லது 12ல் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியைச் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மமதா சந்தித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திசேகர ராவை மமதா சந்தித்தார்.

அதே போல் டெல்லியில் திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழியை மமதா சந்தித்ததார். அப்போது கருணாநிதியை தாம் சந்திக்க விரும்புவதாக கனிமொழியிடம் மமதா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஏப்ரல் 11 அல்லது 12ல் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மமதா பானர்ஜி சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதுமையால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருக்கிறார் கருணாநிதி. சமீபத்தில் அவர் தம்மை சந்திக்க குழந்தையிடம் தான் யார் எனச் சைகையில் கேட்கும் வீடியோ டிரண்டானது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் திமுக, வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் நீடிக்குமா அல்லது மூன்றாவது அணியில் இணைந்து செயல்படுமா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.

பிற செய்திகள்










யாதுமாகி
ஆசிரியர்: எம்.ஏ. சுசீலா
வகைப்பாடு : புதினம் (நாவல்)
விலை: ரூ. 180.00
தள்ளுபடி விலை: ரூ. 165.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



சிந்தனை முழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

ராஜாஜியின் பகவத்கீதை
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)