விருகம்பாக்கம் வங்கி கொள்ளையன் நேபாளத்தில் கைது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 29, 2018, 21:40 [IST] சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை சனி ஞாயிறு இரு நாள்கள் விடுமுறைக்குப் பின் திங்கட் கிழமை திறக்கப்பட்டபோது, வங்கியின் லாக்கரை உடைத்து ரூ.35 லட்சம் ரொக்கம் மற்றும் 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வங்கியில் துப்பரவுப் பணியாளராக இருந்த நேபாளத்தைச் சேர்ந்த சபிலால் மற்றும் அவரின் மகன் தில்லு ஆகியோர் கேஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளைக்குப் பின் அவர்கள் நேபாளம் சென்றிருக்கலாம் என்பதால், அவர்களைத் தேடி 5 தனிப்படை போலீஸார் நேபாளம் சென்றனர். நேபாளத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் சபிலால் சர்வதேச போலீசார் (இண்டர்போல்) உதவியுடன் கைது செய்யப்பட்டான். முன்னதாக, இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளி சபிலால் கைது செய்யப்பட்டுள்ளான்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|