பல்சுவை இணைய இதழ்
  


ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 58.90 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 29, 2018, 14:45 [IST]

மும்பை : பாரத ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை, நேரடி கடன் பத்திர விற்பனையில் பின்பற்றாததால், ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 58.90 கோடி அபராதம் விதித்துள்ளது ரிசர்வ வங்கி.

வாடிக்கையாளர்களுக்கு கடன் பத்திரங்களை வழங்கும்போது அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய விபரங்களை சரியாக வழங்காமை, ஒழுங்குமுறை இணக்கத்தில் குறைபாடுகள் காரணமாக ரூ.58.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மொத்தம் இரு வகையான பாண்டுகள் உள்ளன. விற்பனைக்கு உள்ளவை (Available for Sales- AFS) மற்றும் வியாபாரத்துக்கு உள்ளவை (Held for trading (HFT). ஆண்டுக்கு ஒரு முறை அவற்றில் மாற்றம் செய்து கொள்ள முடியும். அதுவும் நிதியாண்டின் ஆரம்பத்தில் இதனை செய்து கொள்ளும் முடியும். எச்.எஃப்.டி வகை பாண்டுகளில் (HFT)குறைந்த பட்சம் 20 சதவிகிதம் வரை வங்கி இருப்பாக வைத்துக் கொள்ள முடியும். இந்த வகை பாண்டுகளை விற்பனை செய்தமைக்காகவே ஐசிஐசிஐ வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நேற்று (28-03-2018) வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி வழங்கிய 3250கோடி ரூபாய் கடனை வாராக்கடனாக அறிவித்துள்ளதில் எந்த வித முறைகேடும் நடைபெறவில்லை என்று ஐசிஐசிஐ வங்கி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

2008 ஆம் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத், தற்போதைய ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் இருவரும் இணைந்து தொடங்கிய நிப்பவார் ரினியூபல்ஸ் (Nippavar Renuubals) நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி 64 கோடி கடன் வழங்கியுள்ளது. தீபக் கோச்சாரின் அறக்கட்டளைக்கு இந்நிறுவனத்தை ரூ.9 லட்சத்துக்கு வேணுகோபால் கொடுத்துள்ளார். அதற்கு கைம்மாறாகவே ஐசிஐசிஐ வங்கி கடன் தள்ளுபடி செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

பிற செய்திகள்










மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்? எப்படி?
ஆசிரியர்: ஏயெம்
வகைப்பாடு : குழந்தைகள்
விலை: ரூ. 100.00
தள்ளுபடி விலை: ரூ. 90.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



வீழாதே தோழா
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இடர் களையாய்...
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

மகளிருக்கான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)