பல்சுவை இணைய இதழ்
  


குடியாத்தம் அருகே கொடிய விஷமுள்ள 100 பாம்பு குட்டிகள் மீட்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 29, 2018, 14:00 [IST]

வேலூர்: குடியாத்தம் அருகே கொடிய விஷமுள்ள 100 பாம்பு குட்டிகளும், சுமார் 80 பாம்பு முட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திராநகரை சேர்ந்த தொழிலாளி ஜானகிராமன் வீட்டின் பின்புறம் இன்று காலை ஒரே இடத்தில் 100-க்கும் மேற்பட்ட கொடிய வி‌ஷம் கொண்ட பாம்பு குட்டிகள் ஒன்றுமேல் ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தன. 80க்கும் அதிகமான பாம்பு முட்டைகளிலிருந்து பாம்புகளும் வெளிவந்த வணமிருந்தன.

இதையடுத்து விஷயமறிந்த அருகிலிருந்த பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையச் சேர்ந்த மேகநாதன், மூர்த்தி, முத்துராஜா, சதீஷ், சுரேஷ், ரவிச்சந்திரன் ஆகியோர் 100க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளை மீட்டனர். பாம்பு முட்டைகளையும் மீட்டனர். பாம்பு குட்டிகள் எந்த வகையைச் சார்ந்தது என்பது தெரியவில்லை.

இதையடுத்து வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனக்காப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பாம்புகளின் இனம் குறித்து கண்டறிந்து வருகின்றனர். விரைவில் அவர்கள் பிடிபட்ட பாம்புக் குட்டிகளை வனப்பகுதியில் விட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பாம்பு குட்டிகள் மற்றும் பாம்பு முட்டைகள் எவ்வாறு அந்த வீட்டின் பின்புறம் வந்தன. அவை இயற்கையாகவே வந்ததா அல்லது விஷமிகள் யாரேனும் அவற்றை அங்கு கொண்டு வந்து போட்டுள்ளனரா என்பது குறித்த விவரம் உடனடியாகத் தெரியவில்லை.

பிற செய்திகள்










சொல்வது நிஜம்
ஆசிரியர்: மணா
வகைப்பாடு : கட்டுரை
விலை: ரூ. 166.00
தள்ளுபடி விலை: ரூ. 150.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



இனியவள் இருபது
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

சிட்டுக்குருவி
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தடை... அதை உடை...
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)