நலத்திட்டங்களைப்பெற ஆதார் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 28, 2018, 22:55 [IST] பல்வேறு அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். இதன்படி ஆதார் எண்ணை அரசுத் திட்டங்களின் ஆவணங்களுடன் இணைப்பதற்கான கடைசி நாள் மார்ச் 31ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு இன்று இதனை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. அதே போல் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (பான்), ஆதார் எண்ணுடன் இணைக்கும் தேதியை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் வருமான வரி பான் கார்டை இணைக்கும் கடைசி தேதி, ஏற்கனவே மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் தேதியை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் தொடர்பான வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புவரும் வரை ஆதார் எண்ணை வங்கி, மொபைல் எண், பான் கார்டு ஆகியவற்றுடன் இணைப்பது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் மார்ச் 13ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|