திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 28, 2018, 22:20 [IST] ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில் பெருமாள் தரிசனத்துக்காக தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பூந்தி தயாரிக்கும் பணி நடைபெறும் இடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. லட்டு தயாரிப்புக்கென சேமித்து வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் தீயினால் சேதம் அடைந்தன. இதனால் இன்று (28-03-2018) ஒருநாள் மட்டும் அக்கூடத்தில் லட்டு தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|