செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 27, 2018, 19:00 [IST] இவர்களின் நண்பரான விக்னேஷுக்கு பிறந்தநாள் என்பதால் அதனை கொண்டாட, மொத்தம் 7 நண்பர்கள் செம்பரம்பாக்கம் எரிக்கு சென்றனர். அங்கு ஏரியில் கவுதம், திலக் ஆகியோர் குளித்த போது, கவுதம் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அவரைக் காப்பாற்ற சென்ற திலக்கும் சேர்ந்து எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பலியானார்கள். இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கி தேடும் பனியில் ஈடுபட்டனர். இதில் கவுதம் உடல் மீட்கப்பட்டது. திலக் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மீட்கப்பட்ட கவுதம் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிறந்தநாள் விழா கொண்டாட சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|