காவிரி விவகாரம்: நீதிமன்ற அவதிப்பு வழக்கு-தமிழக அரசு முடிவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 27, 2018, 18:30 [IST] காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த வித அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. இதையடுத்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சேகர் ஆப்தே உடனான ஆலோசனைக்குப் பிறகு, காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மார்ச் 31ம் தேதிக்கு முன்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. முன்னதாக இன்று (27-03-2018) காலை கர்நாடக தேர்தல் குறித்து பேட்டியளித்த இந்திய தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் “தேர்தல் நடக்கும் காலங்களில், உச்ச நீதிமன்றம் அறிவித்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தேர்தல் ஆணையம் தலையிடாது. வாரியம் அமைக்க வேண்டும் என்றால் அமைத்துக்கொள்ளலாம். இதற்கும் தேர்தல் ஆணையத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|