வசந்த் அண்ட் கோ, சரவணா ஸ்டோர்ஸ், ஹாட் சிப்ஸில் திடீர் சோதனை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 27, 2018, 16:10 [IST] சென்னை தியாகராய பிரபல வணிக நிறுவனங்களான சரவணா ஸ்டோர்ஸ், வசந்த் & கோ மற்றும் ஹாட் சிப்ஸ் ஆகியவற்றின் கிளைகள் அமைந்துள்ளன. இன்று திடீரென இந்த நிறுவனக் கிளைகளில் ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் இந்த சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது. சரவணா ஸ்டோர்ஸ் கடையில் மட்டும் சுமார் ரூ. 40 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார் வந்திருந்ததால் இந்த சோதனை நடைபெறுவதாகவும், சென்னையில் மொத்தம் 6 இடங்களிலும் கோவையில் 2 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. முழுமையான சோதனை முடிந்த பின்னரே முறைகேடு எந்தளவு நடந்துள்ளது என்பது குறித்து தெரியவரும்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|