ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் திடீர் அழைப்பு: மாலை சந்திப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 27, 2018, 15:25 [IST] இன்று மாலை 6 மணி அளவில் தன்னை சந்திக்க ராஜ்பவன் வருமாறு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் அழைப்பு விடுத்துள்ளார். கர்நாடக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை எதுவும் போடாத நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து திமுக செயற்குழுவின் அவசர கூட்டம் மார்ச் 30 தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநரின் இந்த திடீர் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆளுநரின் தன்னிச்சையான ஆய்வுக்கு ஏற்கெனவே திமுக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் ஆளுநரின் இந்த திடீர் அழைப்பு ஆச்சரியத்தை தோற்றுவித்துள்ளது. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதையடுத்து திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. பல்கலைக்கழகங்களுக்கு எதிராக பல்வேறு முறைகேடு புகார்களை திமுக தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|