மே 12ல் கர்நாடக தேர்தல்: காவிரி வாரியம் அமைக்க தடையில்லை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 27, 2018, 14:45 [IST] காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா ஆட்சி வரும் மே மாதத்துடன் 5 ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இதையடுத்து அங்கு சட்டசபைத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. => கர்நாடகாவில் வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17-ம் தேதி முதல் தொடங்கப்படும். => வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 24-ம் தேதி. => வரும் மே மாதம் 12-ம் தேதி, வாக்குப்பதிவு நடைபெறுகிறது. => 15-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். => மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும். என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார். கர்நாடகாவில், ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவினம் 28 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு, புகைப்படத்துடன்கூடிய வாக்குச் சீட்டு ஒரு வாரத்துக்கு முன்பே தரப்படும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள வி.வி.பி.ஏ.டி (Voter-verified paper audit trail) சீட்டு வழங்கப்படும். தேர்தல் நடக்கும் காலங்களில், உச்ச நீதிமன்றம் அறிவித்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தேர்தல் ஆணையம் தலையிடாது. வாரியம் அமைக்க வேண்டும் என்றால் அமைத்துக்கொள்ளலாம். இதற்கும் தேர்தல் ஆணையத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறினார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|