சென்னை விருகம்பாக்கம் ஐஓபி வங்கியில் நூதன கொள்ளை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 26, 2018, 22:00 [IST] சென்னை விருகம்பாக்கத்தில் ஆற்காடு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையில், இன்று (26-03-2018) காலை ஊழியர்கள் பணிக்கு வந்த போது வங்கியின் சுவரில் துளையிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது வங்கியில் இருந்த 2 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 32 லட்சமாகும். இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை 130 பைகளில் வைக்கப்பட்ட 106 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 2 லாக்கர்கள் மட்டுமே உடைக்கப்பட்டுள்ளது. மற்றவை பாதுகாப்பாக உள்ளது என்பது முதல் கட்டமாக தெரிந்துள்ளது. விசாரணையில் வங்கியிலிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த துப்புரவு ஊழியர் சபில் லால் சந்த் என்பவர் காணாமல் போனது தெரிய வந்தது. துப்புரவு ஊழியராக வங்கியிலேயே பணியாற்றிய அவருக்கு வங்கியின் கீழ் தளத்தில் தனி அறை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. லாக்கர் அறையை துண்டிக்க தரை தளத்திலிருந்து இரண்டு சிலிண்டர்கள் கேஸ்கட்டர் போன்றவற்றை ஒரு நபரால் தூக்கி செல்ல முடியாது. இதை தனது கூட்டாளி ஒருவர் அல்லது இருவருடன் சேர்ந்து செய்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|