தேனி நியூட்ரினோ திட்டம்: சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 26, 2018, 21:40 [IST] தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் அமைந்துள்ள அம்பரப்பர் மலையில் சுமார் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. பொது மக்களும், தனியார் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது. சுற்றுச்சுழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரையை ஏற்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. திட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம், நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. தேனியில் நியூட்ரினோ திட்டத்திற்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தினமும் 340 கி.லி. தண்ணீரை பயன்படுத்தலாம் என்று இத்திட்டத்தை செயல்படுத்தும் டாடா நிறுவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நியூட்ரினோ திட்ட அனுமதிக்கு எதிர்ப்பு இருந்தால் 30 நாட்களுக்குள் பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|