தமிழகத்தில் 4 நகரங்களில் புதிதாக விமான நிலையங்கள் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 26, 2018, 11:30 [IST] ரூ.40 கோடி செலவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தானியங்கி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பயணிகள் நேரடியாக மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்ல முடியும். இந்த தானியங்கி நடைபாதையை தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கலந்து கொண்ட விமான நிலைய ஆணைய செயலாளர் ஆர்.என்.சோபே, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஒசூர், நெய்வேலி, தஞ்சை, வேலூர் ஆகிய 4 நகரங்களில், புதிதாக விமான நிலையங்கள் இந்த ஆண்டுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நேற்று (25-03-2018) முதல் சேலம் விமான நிலையம் செயல்படத் துவங்கி, சென்னை - சேலம் இடையே விமானப் போக்குவரத்து துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|