ரஷ்யாவில் வணிக வளாகத்தில் தீ: 37 பேர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 26, 2018, 08:05 [IST] ரஷ்யவின் சைபீரியாவிலுள்ள கெமிரோவா நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தின் 4வது மாடியில் பிடித்த தீ வேகமாகப் பரவியது. தீயில் கருகி 37 பேர் பரிதாபமாக பலியாகினர். 40 குழந்தைகள் உட்பட 69 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சினிமா அரங்குகள், உணவு விடுதிகள் மற்றும் குழந்தைகள் விலங்குக் காட்சியகம் ஆகியவை அமைந்துள்ள மேல் தளத்தில் தான் முதலில் தீப்பிடித்தது. இதையடுத்து சினிமா அரங்கின் மேல் கூரை இடிந்து விழுந்தது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரித்தது. ஒரே ஒரு சினிமா அரங்கில் இருந்து மட்டும் இறந்தவர்களின் 13 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு கூடத்தில் தான் முதன் முதலில் தீ பிடித்துள்ளது. அங்கிருந்த ஃபோம் ரப்பரால் செய்யப்பட்ட டிராம்போலின் தான் முதலில் தீப்பிடித்துள்ளது. தீவிபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 4 குழந்தைகள் உட்பட்ட 42 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|