25 சதாப்தி ரயில்களின் கட்டணம் குறைகிறது! கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 26, 2018, 07:45 [IST] சதாப்தி ரயில்கள் தற்போது 45 மார்க்கங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அதிகப்படியான கட்டணம் காரணமாக சில மார்க்கங்களில் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதனையடுத்து, டெல்லி - ஆஜ்மிர், சென்னை - மைசூர் ஆகிய இரண்டு சதாப்தி ரயில்களில் கட்டணம் குறைக்கப்பட்ட பிறகு, பயணிகள் எண்ணிக்கை 63 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ரயில்வேக்கு 17% கூடுதல் வருவாய் கிடைத்தது. எனவே, இதேபோல் வருவாய் குறைவாக உள்ள 25-க்கும் மேற்பட்ட சதாப்தி ரயில்களில் கட்டணம் குறைப்பு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரயில்வே உயர் அதிகாரி தெரிவித்தார். இந்த ஆண்டு குடியரசு தினம் முதல் (26-01-2018) சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான சதாப்தி ரயிலில் புதிதாக வடிவமைக்கப்பட்ட அனுபூதி ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இப்பெட்டிகள் கண்கவர் உட்புற மற்றும் வெளிப்புற அலங்காரத்துடன், தானியங்கி கதவுகள், கண்களை உறுத்தாத விளக்குகள், ஒவ்வொரு இருக்கையிலும் எல்.இ.டி. திரை, மின்னணு தகவல் பலகை போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தப் பெட்டியில் பயணம் செய்வதற்கான கட்டணம் சற்று கூடுதலாக உள்ளது.
|
ராசி கோயில்கள் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 305 எடை: 350 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: 978-93-85118-30-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நீங்கள் பிறந்த ராசி என்ன, நட்சத்திரம் என்ன என்பதைப் பொறுத்து, உங்களுக்கு எல்லா வளங்களும் தரும் கடவுளர்களை நீங்கள் அறியலாம்; வணங்கலாம்; வளம்பெறலாம். உங்கள் வாழ்க்கைப் பயணத்துக்கு உதவியாக இருக்கும் இந்த நூல்! கண் முன்னே எத்தனையோ பாதைகள் கிளை பிரிந்து செல்லும்போது, நம் பயணம் எதில் தொடரப் போகிறது என்ற குழப்பம் ஏற்படுவது இயற்கை. ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்போது கவனம் சிதறுவது இயல்பு. நோக்கம் ஒரே மையப்புள்ளியில் குவிந்தால், அந்தப் பணி சிறக்கும். நம்பிக்கை சார்ந்த விஷயங்களிலும் இப்படித்தான். ஆபத்தில் சிக்கிய ஒருவன், பதற்றத்தில் பல கடவுள்களையும் அழைக்க... ‘இவர் போய் காப்பாற்றுவார்’ என அவரும், ‘அவர் போய் கைகொடுப்பார்’ என இவரும் நினைத்துக் கொண்டு வேறு வேலைகளைப் பார்த்ததாகவும், கடைசிவரை அவனுக்குக் கை கொடுக்க யாருமே வரவில்லை என்றும் நம் புராணங்களில் ஒரு கதை உண்டு. கதைதான்! நிஜத்தில் அப்படிக் கைவிடப்படுகிறவர்கள் என யாருமில்லை. ஆனாலும், இந்தக் கதை ஒரு நீதியை உணர்த்துகிறது. எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும், மிக நெருக்கடியான தருணங்களில் சிலரை மட்டும் நம்பி ஆலோசனை கேட்கிறோம்; உதவி வேண்டுகிறோம். நம் மீது அக்கறை கொண்டிருக்கும் அவர்கள் நல்லதே செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப்படிச் செய்கிறோம். ஆன்மிகத்திலும் இப்படித்தான்! எத்தனை கடவுளர்களை வணங்கினாலும், நம் வேண்டுதலை ஒரு புள்ளியில் குவிக்க வேண்டும். அதற்குத்தான் இந்த நூல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|